திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் – துருவ் விக்ரம்(Actor Dhruv Vikram)
இந்திய பாடகர் மற்றும் பாடலாசிரியராக இருந்து திரைப்பிரபலமாக மாறியவர் நடிகர் துருவ் விக்ரம். இவர் ஒரு இந்திய நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார், அவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.

நடிகர் ஆவதற்கு முன்பு

23 செப்டம்பர் 1995 அன்று சென்னையில் நடிகர் விக்ரமிற்கும் மற்றும் அவரது மனைவியாகிய ஷைலஜாவிற்கும் மகனாகப் பிறந்தார்.
அவருடைய மூத்த சகோதரி பெயர் அக்ஷிதா அவர் ஒரு அரசியல்வாதி ஆவார் மு. கருணாநிதியின் கொள்ளுப் பேரனாகிய மனு ரஞ்சித்தை திருமணம் செய்து கொண்டார் அவரது தாத்தா வினோத் ராஜ் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகத்தை அடிப்படையாகக் கொண்டு துருவ் விக்ரம் “குட் நைட் சார்லி” என்ற குறும்படத்தை இயக்கினார் இக் குறும்படம் 2016 இல் YouTube இல் வெளியிடப்பட்டது.
திரைப்பயணம்

2017 அர்ஜீன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை தயாரிப்பாளர் பாலா அவர்கள் ரீமெக் செய்து வர்மா என்ற படத்தினை வெளியிட்டார் இப்படத்தில் துருவ் விக்ரம் முதன் முதலில் திரை உலகில் அறிமுகமானார் இருப்பினும் தயாரிப்பாளருக்கு இறுதி தயாரிப்பில் திருப்தி கிடைக்காததால் பட வெளியீடு நிறுத்தப்பட்டது எனினும் 2019 ஆதித்ய வர்மாவாக படம் வெளியானது
2020 இல் வர்மா திரைப்படம் மிக தாமதமாக வெளிவந்தது சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டு இப் படத்தினை வெளியிட்டனர்.
10 பிப்ரவரி 2022 சியான் விக்ரம் இன் 60ஆவது திரைப்படமான மஹானில் தனது தந்தையுடன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளார் மற்றும் இந்த படத்திற்காக் “மிஸ்ஸிங் மீ” என்ற பாடலை எழுதி பாடியுல்லார்
எதிர்காலத்தில்
இயக்குனர் மாரி செல்வராஜுடன் நடிகர் துருவ் விக்ரம் இணையவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இப்படம் கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் ஸ்போர்ட்ஸ் பயோபிக் என்று கூறப்படுகிறது.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

2020 9வது ஆண்டு தென்னிந்திய சர்வதேச திரைப்படத்திற்காண விருதுக்காக ஆதித்ய வர்மா பரிந்துரைக்கப்பட்டார்
2020 13வது ஆண்டுஆனந்த விகடன் சினிமா விருதுக்காக ஆதித்ய வர்மா வென்றார்
2020 (Best of V2)பெஸ்ட் ஆஃப் வி2 சினிமாஸ் சிறந்த அறிமுகம் – ஆண் ஆதித்ய வர்மா வென்றார்
2020 தமிழ் சினிமா(Journalists Dailies Association) ஜர்னலிஸ்ட்ஸ் டெய்லிஸ் அசோசியேஷன் சிறந்த அறிமுகம் – ஆண் ஆதித்ய வர்மா வென்றார்
2020(Zee Cine Awards ) ஜீ சினி விருதுகள் தமிழ் சிறந்த அறிமுகம் – ஆண் ஆதித்ய வர்மா வென்றார்
டிஸ்கோகிராபி(Discography)

2019 ஆதித்ய வர்மா “எதர்க்கடி” விவேக், துருவ் விக்ரம் (ராப்) ரதன்
ஆதித்ய வர்மா தீம் (கூடுதல் பாடல்)
2022 மகான் “மிஸ்ஸிங் மீ” விவேக், துருவ் விக்ரம் (ராப்) சந்தோஷ் நாராயணன்
2022 மனசே “மனசே” துருவ் விக்ரம்(Ujwaal Gupta ) உஜ்வால் குப்தா
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்