100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவும் நடிகர் துல்கர் சல்மான்..!(Actor Dulquer Salmaan helps 100 children’s surgery)
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் மம்முட்டி. இவருடைய மகனும் நடிகருமான துல்கர் சல்மான். அண்மையில் இவர் நடித்து வெளிவந்த சீதாராமம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், துல்கர் சல்மான் தனது குடும்பத்தினருடன் இணைந்து முக்கியமான திட்டத்தில் இறங்கியுள்ளார். இதன்மூலம், தீவிரமான உடல் உபாதைகளை சந்தித்துவரும் 100 குழந்தைகளுக்கு உதவ இருக்கிறது துல்கரின் குடும்பம்.
Aster Medcity, கைட்ஸ் அறக்கட்டளை மற்றும் துல்கரின் தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films ஆகியவை இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.இந்த திட்டத்துக்கான சின்னத்தை இந்த குழுவினர் சமீபத்தில் அறிவித்திருக்கின்றனர்.
இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
