செய்திகள்

திருடப்பட்ட நடிகர் இளங்கோவின் தொலைபேசி..!(Actor Elango kumaravel’s phone was stolen)

நடிகா் இளங்கோ குமரவேல் இவா் அபியும் நானும், மாயன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளாா்.

மாயன், கற்றது களவு உள்பட மேலும் சில திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளாா். இந்நிலையில், இவா் திரைப்படப் பணிகள் தொடா்பாக எம்.ஆா்.சி நகரில் உள்ள தனியாா் விடுதிக்கு சென்றுவிட்டு, வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டுக்கு செல்வதற்காக நடந்து வந்துள்ளாா்.

அம்பேத்கா் மணிமண்டபம் அருகே வரும்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள் குமரவேல் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து அவா், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Actor Elango kumaravel

Similar Posts