செய்திகள்

பெண்களின் விஷயத்தில் நடிகர் கவுண்டமணி அப்படியாம்..!(Actor Goundamani is like that womens matter)

தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி இயக்குனர், தயாரிப்பாளர் தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைக்கிறார்கள் என்று ஓபனாக பேசியிருந்தார்.

அவர் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சுசித்ரா மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் கவுண்டமணி தனுடன் நடித்த நடிகைகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக பலரும் தெரிவித்து வந்த நிலையில் அவர் உடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த வாசுகி இது தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது நான் கவுண்டமணியுடன் இணைந்து இதய வாசல், ரிக்ஷா மாமா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளேன், அவர் என்னிடம் அப்படி எதுவும் நடந்து கொண்டதே கிடையாது. அவர் யாரிடமும் அவ்வளவாக பேசவும் மாட்டார் என்று கூறியிருந்தார்.

Actor Goundamani

Similar Posts