திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம்-ஹிப்ஹாப் ஆதி(Actor Hip hop Adhi)

இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தன்னை அறிமுகப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி.
நடிகராவதற்கு முன்பு

ஹிப்ஹாப் ஆதி 20 பிப்ரவரி 1990 அன்று பிறந்தார்.இவருடய இயற் பெயர் ஆதித்யா ராமச்சந்திரன் வெங்கடபதி ஆகும்.ஆதியின் தந்தை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர், அவரது தாயார் விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர் ஆவார்.ஆதியின் ராப் மீதான முதல் ஆசை அவரது பக்கத்து வீட்டுக்காரர் மைக்கேல் ஜாக்சனின் “ஜாம்” பாடலை ஐக் காட்டியபோது வந்தது. ஆதிக்கு பத்தாம் வகுப்பில் இருந்தே ராப் மீதான ஆர்வம் வந்து விட்டது.இதே நேரம் ஆதிக்கு பாரதியார் மீதும் தமிழ் மீதும் அதிக பற்று கூடியது.
ஆதி இசை மீது கொண்ட ஆர்வம் ஆதியின் வீட்டில் பிடிக்க வில்லை.இருந்தாலும் அவர் தனது பாடல் களை யாருக்கும் தெரியமல் யூடியூப் இல் பதிவு செய்தார். இதற்காக அவர் திறந்த யூடியூப் செனல் தான் ‘ஹிப்ஹாப் தமிழா’ இதனை அவர் தனது வீட்டிற்கு தெரியாமல் இருக்கவே பாரதியாரின் முகத்தை லோகோ வாக வைத்து யூடியூப் செனலை ஆரம்பித்தார்.
சமூக வலைத்தளமான ஆர்கூட்டில் சென்னையில் உள்ள ஜீவா என்ற இசையில் ஆர்வம் கொண்டவரை சந்தித்தார்.காலபோக்கில் இருவரும் சேர்ந்து ‘ராப்’ பாடல்களைப் பாடினர் ஜீவா மெட்டமைக்க ஆதி பாடுவார்.இப்படியே இருவரும் நல்ல நண்பர்கள் ஆகினர்.ஜீவா பெரிதாக தனது முகத்தை எங்கேயும் காட்டமாட்டார். நிகழ்வுகழுக்கு ஆதியே சென்று வருவார்.ஆனால் ஜீவா ஆதியின் இன்னனோரு கண் என கூறலம். இவ்வறு இருவரும் சேர்ந்து அதிக ஆல்பம் பாடல்களை வெளியிட்டனர்.


இதன் பின்னர் இருவரும் ரேடியோ மிர்ச்சியில் பாடிய ‘கிளப்புல மப்புல’ என்ற பாடல் அதிகம் அனைவராலும் பார்க்கப்பட்டு.வைரலாகிய பாடல் ஆகும்.அடுத்து ஹிட் கொடுத்த பாடல் வரிசையில் இந்தியாவில் நடந்த ஜல்லி கட்டு எதிர்ப்பை. எதிர்க்கும் விதமாக பாடிய பாடல் ‘டக்கரு டக்கரு’ என்ற பாடல் ஆகும்.இது பல இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மற்றும் பல இன்டிபென்டன்ஷ் பாடல்காளையும் பாடியுள்ளார்.

திரைக்கு வருதல்
அனிருத் மூலம் ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தில் ‘சென்னை சிட்டி ஹேங்ஷ்டார்’ என்ற பாடல் மூலம் திரைக்கு அறிமுகமாகினார்.இதற்கு முன்னரே அனிருத்துடன் சேர்ந்து ‘எதிர் நீச்சல்’திரைப்படத்திற்காக ‘எதிர் நீச்சல் அடி’ என்ற பாடலில் இணைந்து பாடினார்.மற்றும் (தனி ஒருவன்,இன்று நேற்று நாளை,ஆம்பளா,அரண்மனை2,கதகளி,கவண்) போன்ற படங்களில் இசையமைத்து அதிக ஹிட் அடித்தது.
கதா நாயகனாக
கதா நாயகனாக இவர் அறிமுகமாகியது ‘மீசைய முறுக்கு’ என்ற திரைபடத்தின் மூலம் ஆகும்.இந்த திரைபடத்தில் கதாசிரியரகவும்,இயக்குனரகவும்,கதா நாயகனாக திரைக்கு வந்தார்.இத் திரைப்படம் ஹிப்ஹாப் ஆதியின் வாழ்க்கை சம்பவத்தை தழுவியதாக அமைந்திருந்தது.இதில் இவரே பாடல்களை எழுதி,பாடியும் இருந்தார். இந்த திரைப்படம் அதிகளவில் மக்களால் பேசப்பட்டு வந்தது மட்டும் இன்றி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மற்றும் உலகளவில் 15 கோடிகளை வசூலித்தது குறிப்பிட தக்கது.

அடுத்து ‘நட்பே துணை’ இந்த திரைப்படம் நண்பர்களின் சிறப்பயும்,ஹாக்கி விளையாட்டின் தனித்துவத்தையும் கூறும் விதமாக அமைந்திருந்தது.இந்த திரைப்ப்டத்தில் அதிக நடிகர்களை அறிமுகபடுத்தி உள்ளார்.
இத்திரைப்படம் ஒரு மைதானத்தை கைப்பற்றுவதாக அமைந்திருக்கிறது.இப்படத்தில் உள்ள பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.மற்றும் அரசியல் வாதிகளின் தீங்கு செயலுக்கு மக்கள் தான் காரணம் என்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

2020 வெளிவந்த திரைப்படம் தான் ‘நான் சிரித்தால்’ திரைப்படமாகும்.இது ஒரு வித்தியாஷமான கதைக்களத்தை கொண்டது ஆகும்.இத் திரைப்படத்தில் ஆதி பதற்றபட்டாலும்,கவலையாக இருந்தாலும் சிரித்து விடுவார்.மொத்தமாக சிரிப்பின் சிக்கலை வைத்து படம் தயாரிக்கபட்டுள்ளது.
இதில் வந்த பாடல்கள் சிறப்பு பெற்றிருந்தாலும் ‘ஹப்பி பேர்த்டே எங்க அண்ணனுக்கு’ என்ற பாடல் வைரலாகி வந்தது குறிப்பிடதக்கது.இருந்தாலும் மக்களை அவ்வளவு என்று ஈர்க்க வில்லை.

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி இயக்கிய திரைப்படம் தான் சிவகுமாரின் சபதம். மீசைய முறுக்குக்கு திரைப்படத்திற்கு பிறகு எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அவரது இரண்டாவது ஆகும். இது நகைச்சுவை திரைப்படம் ஆகவும்.
கிராமவாழ்க்கையை தழுவியதாகவும் எடுக்கப்பட்டது.மற்றும் குடும்ப வாழ்க்கையை பற்றி கூறும் படமாகவும் அமைந்துள்ளது.இத் திரைப்படம் போதுமான வெற்றியை ஈட்டி கொடுக்க வில்லை.இது கலவையான விமர்சனங்களை பெற்ற படமாகும்.

ஹிப்ஹாப் ஆதி நடித்த படங்களில் திரைக்கு இறுதியாக வந்ததில் ‘அன்பறிவு’ இடம் பெற்றுள்ளது.இத் திரைப்படத்தில்.ஆதி இரு வேடங்களில் நடித்துள்ளார்.இதில் நடிகர் நெப்போலியன் நடித்தது குறிப்பிட தக்கது.இதில் அன்பு,பாசம்,கோபம், என்ற வகையில் படம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஒருவர் கிராமத்து காட்டானாகவும் மற்றவர் கனடாவில் சாந்தமான மன நிலையுடன் வாழ்பவராகவும் காட்டப்பட்டுள்ளது.பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் முகமாகவும் மற்றும் இத் திரைப்படம் குடும்பமாக கண்டு ரசிக்ககூடிய படமாக அமைந்துள்ளது.திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இல் இத் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.இருந்தாலும் அதிக வசூலை ஈட்டவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

திருமண வாழ்க்கை
நவம்பர்.2017 அன்று ‘லட்சையா தேவரெட்டி’ என்பவரை திருமணம் செய்து கொண்டர்.இத் தகவல் அதிகம் சோஷியல் மீடியாவில் வந்து மக்களால் பகிரப்பட்டு வந்தது குறிப்பிட தக்க விடயமாகும்.

வர இருக்கும் திரைப்படங்கள்
ஆதி 2023 இல் வெளியிட இருக்கும் திரைப்படதின் பெயர் ‘வீரன்’ என்று அறியப்பட்டுள்ளது.இதன் படபிடிப்பு தற்போழுது நடந்து வருவதாக தகவல் கிடைக்கபெற்றுள்ளது.இதில் பங்கு பெறும் நடிகர்கள் மற்றும் ஏனைய விடயம் பற்றி தகவல் கிடைக்கவில்லை.
விருதுகள்
2013 பிக் எஃப்எம் விருதை ஆண்டின் இணைய உணர்வு என்ற வகையில் வாங்கினார்.அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் வருடாந்த நிகழ்வு தொழில்நுட்பங்கள் விருதை ஆண்டின் சுதந்திர கலைஞர் என்ற வகையில் வாங்கினார்.2015 எடிசன் விருதை தி ரைசிங் ஸ்டார் ஆஃப் 2014 ஆண் என்ற வகையில் வாங்கினார்.2016 சைமா விருதை சிறந்த இசையமைப்பாளர் – தனி ஒருவன் திரைப்படத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.2017 தேசி விருது ஆண்டின் டிஜிட்டல் பிறைட் ஒஃப் த இயர் என்ற வகையில் வாங்கினார்.2018 சிட்டி சினி விருது பிடித்த அறிமுக வீரர் என்ற வகையில் வாங்கினார்.மற்றும் பிஹைண்ட்வுட்ஸ் தங்கப் பதக்கங்கள் விருது சிறந்த பொழுதுபோக்கு படம் மீசைய முறுக்கு என்ற வகையில் வாங்கினார்.2019பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மைக் விருது சுதந்திர இசையின் ஐகான் என்ற வகையில் வாங்கினார்.2020 பிளாக்ஷீப் டிஜிட்டல் விருது தமிழின் பெருமையின் உருவகம் தமிழி என்ற வகையில் வாங்கினார்.

