செய்திகள்

நடிகர் ஜாக்கி ஷெராப் இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டரை பரிசளித்துள்ளார் | Actor Jackie Shroff gifted a scooter to director Nelson

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Actor Jackie Shroff gifted a scooter to director Nelson

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடைபெற்றது. ஜெயிலர் படத்தின் தற்போதைய படப்பிடிப்பு மங்களூர் நகரில் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாக்கி ஷெராப்
ஜாக்கி ஷெராப் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பாலிவுட் துறையில் உள்ளார், மேலும் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தி, தமிழ், பெங்காலி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, போஜ்புரி, கொங்கனி, ஒடியா, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அவர் சுபாஷ் காயின் ஹீரோ (1983) திரைப்படத்தின் மூலம் ஒரே இரவில் நட்சத்திரமானார். இவர் தமிழில் பிகில், கோச்சடையான் மற்றும் KGF திரைப்படம் மூலம் ஒரு கொடூரமான வில்லனாக தனது நடிப்பை நிலைநிறுத்திக் கொண்டார். தற்ப்போது ஜெயிலர் மற்றும் லியோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ஜாக்கி ஷெராப், ஒரு மஞ்சள் நிற ஸ்கூட்டரை இயக்குனர் நெல்சனுக்கு பரிசளித்துள்ளார்‌. இயக்குனர் நெல்சன், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக நடிகர் ஜாக்கி ஷெராப்புக்கு நன்றி கூறி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்கூட்டர் மீது ஏறி அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Actor Jackie Shroff gifted a scooter to director Nelson

Similar Posts