செய்திகள்

சுந்தர் சியின் சங்கமித்ரா படத்திலிருந்து விலகிய நடிகர் ஜெயம் ரவி..!(Actor Jayam Ravi left Sundar C’s film Sangamithra)

இயக்குனர் சுந்தர் சி. நீண்ட நாட்களாக தனது கனவு படமான ‘சங்கமித்ரா’ என்ற சரித்திர பின்னணிக் கொண்ட படத்தை இயக்க முயற்சித்து வருகிறார்.

இந்த படம் பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் என கடந்த மூன்று ஆண்டு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கவிருந்தனர்.

Actor Jayam Ravi

ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானார். நிதி சிக்கலால் இப்படம் திடீரென நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நடிகர் ஜெயம் ரவி படத்தில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar Posts