செய்திகள்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய‌ நடிகர் கமல்ஹாசன்..!(Actor Kamal Haasan returned home after being admitted to the hospital)

கமல் ஹாசன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வருகிறார்.இதை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் KH 233 மற்றும் மணி ரத்னம் இயக்கத்தில் KH234 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய கமல் ஹாசனுக்கு தீடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம்.

லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கமல் ஹாசனுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

Actor Kamal Haasan

Similar Posts