இயக்குனரை வியப்பில் ஆழ்த்திய நடிகர் கமல்..!(Actor Kamal surprised the director)
காந்தாரா திரைப்படம் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படமாக மாறியுள்ளது. தற்போது படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் லெஜெண்டிடம் இருந்து இந்தப் பாராட்டு வருவது மிகப்பெரியதாக கருதுகிறேன்.
இந்த அருமையான எதிரபாராத பரிசை பார்த்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த அரியப் பரிசினை கொடுத்ததற்கு நன்றி கமல் சார்” என பதிவிட்டுள்ளார்.
