செய்திகள்

ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்..!(Actor kamalhaasan condoled the death of Queen Elizabeth..!)

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

5 ஆண்டுகளுக்கு முன்னர்  லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.

தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ராணி எலிசபெத் கடந்த 1997-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தபோது, தமிழகத்திற்கு வருகை தந்து அப்போது நடைபெற்ற கமலின் மருதநாயகம் படத்தின் ஷுட்டிங்கின் தொடக்க விழாவில் பங்கேற்றார்

Actor kamalhaasan
Actor kamalhaasan

Similar Posts