ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரூவுடன் வேர்ல்டு ரெஸ்ட்லிங்கில் நடிகர் கார்த்தி..!(Actor Karthi in World Wrestling with wrestling superstar Drew )
மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ படத்திலும் நடித்தார் கார்த்தி. தீபாவளி ரிலீசாக வெளியான இந்தப்படமும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது ராஜு முருகனின் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.
இவர் குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வேர்ல்டு ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மென்ட் (WWE) நிகழ்ச்சிக்காக ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரூவுடன் நடிகர்கள் ஜான் ஆபிரஹாமும், கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிவித்துள்ளது சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்.
தமிழிலும் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த போட்டியில் தமிழுக்கான விளம்பர தூதராக நடிகர் கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
