செய்திகள்

கன்னட திரையுலகில் எதிர்ப்பை சம்பாதித்த நடிகர் கிஷோர்..!(Actor Kishore who earned opposition in Kannada film industry)

நடிகர் கிஷோரின் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் நடிகர் யாஷ் நடித்த ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்த கே.ஜி.எப். குறித்து கிஷோர் கூறும்போது,

”எனக்கு கே.ஜி.எப். போன்ற படங்கள் பிடிக்காது. கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்கவில்லை. இதுபோன்ற படங்களுக்கு பதிலாக நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம்” என்று கூறினார்.

இதையடுத்து கிஷோருக்கு கன்னட திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியது.இந்த நிலையில் கே.ஜி.எப். அர்த்தமற்ற படம் என்று நான் பேசவில்லை என்று கிஷோர் விளக்கம் அளித்துள்ளார்.

Actor Kishore

Similar Posts