செய்திகள்

நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் இந்தியாவுக்காக 5 தங்கப் பதக்கங்களை வென்றார். | Actor Madhavan’s son Vedant won 5 gold medals for India in the swimming competition.

ராக்கெட்ரி படத்தைத் தொடர்ந்து நடிகர் மாதவன் ஜிடி நாயுடு படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் டாப் ஹீரோவாக இந்தியா முழுவதும் மாதவனுக்கு செல்வாக்கு இருந்தாலும், அவரது மகன் வேதாந்த் மாதவனை நடிகராக அவர் மாற்றவில்லை.

Actor Madhavan’s son Vedant won 5 gold medals

மாறாக, மகனுக்கு அதிக ஆர்வம் இருக்கும் நீச்சல் துறையில் அவரது திறமைகளை வெளிக்காட்ட முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறார். அப்பாவின் பெயரை கெடுக்காமல் அடுத்தடுத்து தங்கப்பதக்கங்களை பெற்று தந்தையின் உச்சியை குளிர வைத்து வருகிறார் வேதாந்த்.

சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்ட வேதாந்த் மாதவன் சமீபத்தில், மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியிலும் 5 தங்கப்பதக்கங்களை வென்று தந்தையை பெருமைப்பட வைத்துள்ளார்.

Similar Posts