விஜய் மற்றும் சூரியாவை விட்டுச் செல்லும் போது அழுத நடிகர் மகேஷ்பாபு..!(Actor Mahesh Babu cried while leaving Vijay and Suriya)
தெலுங்கு ஸ்டாரான நடிகர் மகேஷ்பாபு வளர்ந்தது சென்னையில் தான். சினிமா கேரியரை தொடங்க தான் தெலுங்கு பக்கம் மகேஷ்பாபு சென்றார்.
இந்நிலையில் மகேஷ் பாபு மற்றும் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். மேலும் மகேஷ்பாபு 1999 வரை சென்னையில் தான் வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் தான் மகேஷ் பாபு தமிழில் சரளமாக பேசுவார். மேலும் சென்னையில் உள்ளவரை மகேஷ் பாபு, விஜய், சூர்யா, யுவன் சங்கர் ராஜா ஆகிய 4 பேரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக அப்போது இருந்துள்ளனர். இவர்கள் சென்னையில் லயோலா கல்லூரியில் படித்துள்ளனர்.
எங்கு சென்றாலும் இந்த நால்வரும் சேர்ந்து தான் சுற்றுவார்கள். இவர்களை விட்டு மகேஷ் பாபு தனியாகச் செல்லும்போது கண்ணீருடன் கிளம்பினாராம். இப்போது 4 பேருமே தமக்கென சினிமாவில் முத்திரை பதித்துள்ளனர்.
