செய்திகள்

நடிகர் மகேஷ் பாபு புது லுக்கில் மாஸ் போட்டோ | Actor Mahesh Babu new look mass photo

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. தற்போது இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் #SSMB28 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

Actor Mahesh Babu new look mass photo

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) இப்படத்தை தயாரிக்கிறார். நவின் நூலி எடிட்டராகவும், கலை இயக்குனராக ஏஎஸ் பிரகாஷூம், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக எஸ் தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக பிஎஸ் வினோத் ஆகியோரும் படத்தில் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Arm day’ என பதிவிட்டு புதிய லுக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Similar Posts