தந்தையின் படத்திற்கு முன் கலங்கி நிற்கும் நடிகர் மகேஷ்பாபு.!(Actor Mahesh Babu who is disturbed in front of his father’s film)
முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மூன்றாம் நாள் காரியம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இருந்து மகேஷ் பாபுவின் புகைப்படங்கள் வெளியாகின. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகேஷ் பாபுவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். சோகம் கண்ணில் தெரிவதாகவும், தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.


