செய்திகள்

பல நடிகர்கள் என்னோடு நடிக்க பயப்படுவார்கள் என நடிகர் பிரகாஷ்ராஜ்..!(Actor Prakashraj says many actors are afraid to act with me)

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக அரசியல் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ”சமீப காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்தவர்கள் இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை.

நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள். என்னோடு நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அந்த பயத்தோடு என்னை விட்டு அவர்கள் விலகுகிறார்கள். இது என் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனது குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இறந்து விடுவேன். நிறைய நடிகர்கள் மவுனமாக இருக்கிறார்கள். அவர்களை குறை கூற விரும்பவில்லை. ஒரு வேளை அவர்கள் பேசினால் அதனால் வரும் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது” என்றார்.

Actor Prakashraj

Similar Posts