பாரபட்சமின்றி சிறுவனின் காலில் விழுந்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!(Actor Raghava Lawrence fell at the boy’s feet without prejudice)
நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு சிறுவனின் காலில் விழுந்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அது பற்றி அவர், இனி நானா யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது என கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையைச் செய்வேன்.
நீண்ட நாட்களாக எனக்குள் இந்த ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர காத்திருந்தேன். இன்று அதற்கான முதல் அடி எடுத்து வைக்கிறேன்.
ஒரு குடும்பத்தினர் தங்கள் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு என்னிடம் வரும்போது என் கால்களில் விழவந்தனர். நான் விலகிச் சென்று, உதவி தேவைப்படும் அந்த குழந்தையை பார்த்தேன், அந்த குழந்தை தனது பெற்றோர் என் காலில் விழுந்தவுடன் உடனடியாக அழ தொடங்குகிறது.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என நம்புகிறவன் நான்.. அதனால் கடவுள் என் காலில் விழுவது போல் அப்போது உணர்ந்தேன்.உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை, இது தொடர்பான வீடியோவை விரைவில் வெளியிடுகிறேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
