நடிகர் ரகுமானின் அழகான குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | Actor Rahman’s cute family photos are going viral
எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய நிலவே மலரே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரகுமான்.

அதன்பிறகு வசந்த ராகம், ஒருவர் வாழும் ஆலயம் என தொடர்ந்து படங்கள் நடித்த ரகுமானுக்கு புதுப்புது அர்த்தங்கள், சங்கமம் போன்ற படங்கள் அவரது திரை வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை கொடுத்தன.

இப்போது நிறைய குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரகுமான்.

இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சகோதரி மெஹருன்னிசா என்பவரை ரகுமான் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவரது முதல் மகளுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு ஒரு மகனும் பிறந்தார்.

தற்போது ரகுமான் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.