செய்திகள்

4ஆவது முறையாக தாத்தாவான நடிகர் ரஜினி..!(Actor Rajini became a grandfather for the 4th time)

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, தனது முதல் கணவன் அஸ்வினுடன் விவாகரத்து பெற்றபின், தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்து கொண்டார்.

அஸ்வின் – சவுந்தர்யாவின் மகனான வேத், சவுந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறார். இந்நிலையில், விசாகன் – சவுந்தர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது 4வதாக பேரன் பிறந்துள்ளதை குறிப்பிட்டும், ரஜினிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Actor Rajini

Similar Posts