செய்திகள்

மும்பையில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் கண்டு மகிழ்ந்துள்ளார் | Actor Rajinikanth is enjoying watching the first ODI between India and Australia in Mumbai

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Actor Rajinikanth

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Actor Rajinikanth

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியை கண்டு ரசிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

அதுமாத்திரம் இல்லாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குல்தீப் யாதவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குல்தீப் யாதவ், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், ஒரே சந்திரன், ஒரே சூரியன், ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” என பதிவிட்டுள்ளார்.

Similar Posts