சீட்டாட்டத்தை தடை செய்ய குரல் கொடுத்த நடிகர் ராஜ்கிரண்..!(Actor Rajkiran voiced to ban card game)
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும்படி நடிகர் ராஜ்கிரண் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து ராஜ்கிரண் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அந்த காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. “காவல்துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே” என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, “ஆன்லைன் ரம்மி” என்ற பெயரில் பயமில்லாமல் ஆடலாம்.
இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. தமிழக அரசு இந்த நாசகார, உயிரோடு விளையாடும் விளையாட்டை தடுக்க சட்டம் இயற்றியும், அதை செயல்படுத்த முடியாமல் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இது, எதில் போய் முடியுமென்று தெரியவில்லை” என கூறியுள்ளார்.
