தனித்துவ ஆடை நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பிடித்த நடிகர் ராம் சரண்..!(Actor Ram Charan is in the list of unique dress stars)
கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அண்மையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
இதில் நட்சத்திர நடிகர்களும், நடிகைகளும், கலைஞர்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம்சரண்,

அவர் அணிந்திருந்த தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய ஆடைக்காக, ‘சிறந்த ஆடை அணிந்து விழாக்களில் கலந்து கொள்ளும் நட்சத்திர நடிகர்’களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இத்தகைய பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர் இவர் தான் என்பது தனி சிறப்பு. இதற்காக அவருக்குப் பலரும் சமூக ஊடகங்களின் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
