10 ஆண்டுகளுக்கு பிறகு அப்பாவாக போகிறாராம் நடிகர் ராம்சரண்..!(Actor Ramcharan is going to be a father after 10 years)
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.
நிகழ்வில் பேசிய உபசனா, ”நானும் என் கணவர் ராம் சரணும் 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறோம். எங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ராம்சரண் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார். அவருக்கும் அவரது மனைவி உபசனாவுக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதென அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட போஸ்டரில், “ஸ்ரீ அனுமான் அவர்களின் ஆசியுடன், ராம் சரண் & உபசனா அவர்களின் முதல் குழந்தையை எதிர்நோக்கியுள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் சிரஞ்சீவி குடும்பத்தினர்” என பதிவிட்டுள்ளார்.
