செய்திகள்

விமான பயணத்தில் ‘லக்கேஜ்’ தொலைந்ததால் கோபத்தில் நடிகர் ராணா..!(Actor Rana is angry because ‘luggage’ was lost in the flight)

பிரபல தெலுங்கு நடிகர் ராணா தனியார் விமானம் ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது அவரது பொருட்கள் அடங்கிய ‘லக்கேஜ்’ மாயமாகி விட்டது.

இதுகுறித்து ராணா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”விமான பயணத்தில் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. விமானத்தில் காணாமல் போன எனது உடைமைகள் அடங்கிய லக்கேஜ் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை.

அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது என்று பதில் சொல்கிறார்கள். இந்த விஷயம் சக பயணிகளுக்கு தெரியும். ஆனால் அதிகாரிகள் தெரியாது என்கின்றனர். இதை விட கேவலம் இருக்குமா?” என்று கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட விமான நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களையும் கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்.

Actor Rana

Similar Posts