செய்திகள்

திரையுலகில் மேலும் ஒரு சோகம், நடிகர் சரத்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். | Another tragedy in the film industry is actor Sarath Babu died without treatment.

தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சரத்பாபு. கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது உயிரிழந்தார். ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

actor Sarath Babu died without treatment

கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சரத்பாபு முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல ஹிட்படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சரத்பாபு, வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில், திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

actor Sarath Babu died without treatment.

தற்போது நடிகர் சரத்பாபு {வயது 71} உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
இதை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையும் உறுதி செய்துள்ளதாம். அவரின் உடலில் பல உறுப்புகள் செயல் இழந்ததால் அவர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

இவருடைய மறைவு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Similar Posts