செய்திகள்

நடிகர் சரத்பாபு நலமுடன் இருக்கிறார் – குடும்பத்தினர் தகவல்| Actor Sarath Babu is Stable

உடல் நலக்கோளாறால் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வெளியான தகவல்களுக்கு அவரது குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக வென்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து இருப்பதாக சற்று முன் செய்தி பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி தான் என்பது தெரியவந்திருக்கிறது.

Actor Sarath Babu is Stable

ஆனால் இது உண்மையில்லை என சரத்பாபுவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்து இருக்கின்றனர். அவர் இன்னும் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தான் இருக்கிறார் என தெரிவித்து இருக்கின்றனர்.

குஷ்பு, பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் சரத்பாபுவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்த நிலையில், வதந்தி என தெரிந்ததும் நீக்கிவிட்டனர்.

Similar Posts