செய்திகள்

“மீண்டும் படம் இயக்கபோகும் நடிகர் சசிகுமார்..!(Actor Sasikumar will direct the film again)

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்‌ஷமன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

 இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சசிகுமார் ,“இது எனக்கான கதை. என் மண்ணின் கதை. ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம் தான் பண்ணுவேன். 

அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டைரக்‌ஷனில் படம் இயக்குகிறேன். அதற்கான அறிவிப்பை இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்” என்று கூறினார்.

Actor Sasikumar

Similar Posts