செய்திகள்

நடிகர் சத்யராஜ் தனது மகள் திவ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் | Actor Sathyaraj congratulated his daughter Divya

இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவருக்கு சிபிராஜ், திவ்யா சத்யராஜ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

Actor Sathyaraj congratulated his daughter Divya

1978ஆம் ஆண்டு தொடங்கிய இவரது கலைப் பயணம் இன்று வரை தொடர்கிறது. வில்லன் நடிகராக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் முன்னணி நடிகராக மாறி, தற்போது கிடைக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மூன்று தலைமுறைகள் கடந்து இன்னும் நிலைத்து நிற்கக்கூடிய நடிக்கிறார்.

இதில் சிபிராஜ் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். திவ்யா சத்யராஜ் சமூக சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தனது மகள் குறித்து பெருமிதமாக பேசியுள்ளார்.
அதாவது

” பசுமைப்பள்ளி, பசுமைசமுதாயம் திட்டத்தில் ஈழத்து செல்வா பேத்தியுடன் என் மகள் இணைந்து செயல்படுவார் என்றும், ஈழத்தமிழர்களின் நலனுக்காக என்றும் உழைப்பார் ” என்றும் கூறியுள்ளார். சத்யராஜ் தனது மகள் குறித்து தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

Similar Posts