செய்திகள்

நடிகர் அஜித்தால் மனைவியிடம் திட்டு வாங்கும் நடிகர் ஷாம்..!(Actor Shaam scolds from his wife by Actor Ajith)

வாரிசு திரைப்படத்தில் கூட, விஜய்க்கு அண்ணனாக நடித்தவர் நடிகர் ஷாம். நடிகர் ஷாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் அஜித் சாருடைய மகளும் என்னுடைய மகளும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறார்கள். சில நேரங்களில் என்னுடைய குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வர என்னுடைய மனைவி மட்டும் பள்ளிக்கூடத்திற்கு செல்வார்.

அப்போது அஜித் சார் அவருடைய குழந்தையை கூப்பிட வந்ததை பார்த்துவிட்டு வந்து என் மனைவி “அஜித் சாரே அவருடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வருகிறார் நீங்கள் எதற்காக வருவதில்லை..? என திட்டுவார். அஜித் சாரால் அப்படி பலமுறை என் மனைவியிடம் திட்டு வாங்கியுள்ளேன்” என கூறியுள்ளார் ஷாம்.

Actor Shaam

Similar Posts