செய்திகள்

பெற்றோர்களை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு வைத்த சித்தார்த்..!(Actor Siddharth accused of harassing his parents)

நடிகர் சித்தார்த் தற்போது குறைந்த அளவு படங்களில் மட்டும் நடித்து வரும் இவர் சினிமா மட்டுமின்றி அரசியல் கருத்துக்களையும் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் மதுரையில் உள்ள விமான நிலைய பாதுகாப்புப் பணியாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் சித்தார்த். அதில், “CRPF அதிகாரிகள் 20 நிமிடத்திற்கு எனது மூத்த பெற்றோர்களை துன்புறுத்தினார்கள். மேலும் நாங்கள் வைத்திருந்த பைகளில் இருந்து நாணயங்களை அகற்றச் செய்தார்கள்.”

”அதிகாரிகள் பலமுறை எங்களிடம் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர், அவர்கள் ஆங்கிலத்தில் பேச மறுத்துவிட்டனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​பாதுகாப்புப் பணியாளர்கள், ‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ என்று பதிலளித்தனர்”. இவ்வாறு சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Actor Siddharth

Similar Posts