வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிம்பு..!(Actor Simbu in Varisu movie)
வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிம்பு பணியாற்றி இருப்பதாக, தகவல் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் வாரிசு திரைப்படத்தை , டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக விளங்கும் தில் ராஜு , பிரம்மாண்ட முறையில் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் மற்றுமொரு பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன்னதாக இப்பாடலின் பதிவு வேலைகள் முடிந்துள்ளதாகவும், அடுத்த மாதம் இப்படாலை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இத்தகவல் வெளியானது முதல் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.