மீண்டும் பட வாய்ப்புகளை இழக்கும் நடிகர் சிம்பு!(Actor Simbu is losing film opportunities again!)
தொடர் வெற்றி படங்களான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்களில் நடித்த நடிகர் சிம்பு தற்போது பத்து தல எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந் நிலையில் நடிகர் சிம்பு சம்பளத்தை ரூ.35 கோடிகளாக உயர்த்தியுள்ளார். இவரது நடிப்பில் உருவாக விருக்கும் விண்ணைதான்டி வருவாயா 2 மற்றும் கொரோனா குமாரு எனும் படங்கள் உருவாகவுள்ளது.
சம்பளத்தை உயர்த்திய காரணத்தால் இயக்குனர்கள் பேச்சு வார்த்தை நடாத்தி வருகின்றனர். சிலம்பரசன் சம்பளம் விஷயத்தில் மாற்றம் இல்லை என்பதால் இவருக்காக எழுதிய கதைகளில் வேறு நடிகர்களை நடிக்க வைக்க இயக்குனர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் நடிகர் சிம்பு மீண்டும் திரைப்பட வாழ்க்கையை இழக்கிறார்.
