செய்திகள்

சிறு வயதில் நடந்த ஓவிய போட்டியில் ஐஸ்வர்யா ராயை வரைந்துதான் பரிசு பெற்ற நடிகர் சிம்பு | Actor Simbu won a prize for drawing Aishwarya Rai in a painting competition held at a young age

மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இவ்விழாவில் படக்குழுவினர் தவிர கமல் ஹாசன், பாரதிராஜா, சிலம்பரசன் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட சிம்பு பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். பத்து தல ரிலீஸாவதால் டென்ஷனாக இருக்கிறேன். என்னுடைய குரு கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் எல்லோரும் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் முன் எனக்கு பதற்றமாக இருக்கிறது. எல்லோருக்கும் தெரியும். பொன்னியின் செல்வன் முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்று. இப்ப இரண்டாம் பாகம் வெளிவரப் போகுது.

மணிரத்னம்தான் வாய்ப்பு கொடுத்தார் எனது கஷ்டமான சூழலில் மணி சார்தான் வாய்ப்பு கொடுத்தார் நான் கஷ்டமான சூழலில் இருந்தபோதுசெக்க சிவந்த வானம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் மணிரத்னம். நான் அவரை சின்ன குழந்தையாகவே பார்க்கிறேன். காரணம் குழந்தைகள் மட்டும்தான் தனக்கு என்ன வேணுமோ அடம்பிடித்து பெற்றுக்கொள்வார்கள். அந்த மாதிரிதான் மணிரத்னம். தனக்கு வேண்டும் என நினைக்கிறது வரும்வரைக்கும் விடமாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய சிம்பு சின்ன வயதில் பள்ளியில் படிக்கும்போது என்னை ஓவியம் வரைய சொன்னார்கள். எனக்கு என்ன வரைய வேண்டும் என தெரியலை. நான் ஐஸ்வர்யா ராயை வரைந்தேன். எனக்கு முதல் பரிசு கொடுத்தார்கள்.

நான் வரைந்ததால் முதல் பரிசு கிடைக்கவில்லை. அதில் ஐஸ்வர்யா ராய் இருந்ததால்தான் முதல் பரிசு கிடைத்தது. குந்தவையா, நந்தினியா என கேட்கிறார்கள். இரண்டு கண்களில் எது வேண்டும் என்று கேட்டால் என்ன பண்ண முடியும்” என்றார்.

Similar Posts