செய்திகள்

சிவகார்த்திகேயன் மட்டும் வேண்டாம் உதறி தள்ளிய சானல்கள்..!(Actor Sivakarthikeyan is not the only channel that rejected)

சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து மளமளவென பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

டான் படமும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.  இந்நிலையில் சிவகார்த்திகேயனை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ் மெரினா படத்தின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 

மெரினா படத்தை முடித்துவிட்டு அப்படத்தின் ப்ரோமோஷன்களுக்காக சிவகார்த்திகேயனை அழைத்து கொண்டு பல சானல்களுக்கு சென்று எங்களை பேட்டி எடுத்து மெரினா படத்தை ப்ரொமோட் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.

ஆனால் அவர்கள் சிவகார்த்திகேயனை தவிர யார் வேண்டுமானாலும் வாருங்கள், நாங்கள் பேட்டி காண்கின்றோம், ஆனால் சிவகாத்திகேயன் மட்டும் வேண்டாம் என்றார்கள். ஏனென்றால் அவர் விஜய் டிவியில் பிரபலமாக இருந்ததால் அவரை மற்ற சானல்கள் பேட்டி எடுக்க முன்வரவில்லை என்றார் பாண்டிராஜ்.

ஆனால் இன்று சிவகார்த்திகேயனை பேட்டி எடுக்க பல சானல்கள் போட்டிபோட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Actor Sivakarthikeyan

Similar Posts