செய்திகள்

கொரிய மொழியை கிண்டல் செய்தாரா, நடிகர் சிவகார்த்திகேயன்..!(Actor Sivakarthikeyan teased the Korean language)

தனது திறமையால் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். அவருக்கு குடும்பத்து ரசிகர்களிடத்திலும், குழந்தைகளிடத்திலும் நல்ல வரவேற்பு உண்டு. அவர் நடித்து கடைசியாக வெளிவந்த ‘டான்’ படத்தில் சூரியுடன் சேர்ந்து வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசி நகைச்சுவை செய்திருப்பார். அதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அந்த நகைச்சுவைக் காட்சி பற்றி சமீபத்தில் ஒரு பள்ளி விழாவில் அவர் பேசியிருப்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரது பேச்சில், கொரிய மக்கள் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் அவதூறாகப் பேசியுள்ளார்.

“நான் எப்ப கொரியன் படம் பார்த்தாலும் அதுல நடிக்கிறவ ஆர்ட்டிஸ்ட்லாம் ஒரே மாதிரிதான் தெரிவாங்க. எது ஹீரோ, எது ஹீரோயின்னே தெரியாது. கொரியால இதைப் பார்த்தால் டென்ஷனாகிடுவாங்க,” என பள்ளிக் குழந்தைகள் முன் பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்து பதிவிட்டு வருகிறார்கள்.

Actor Sivakarthikeyan

Similar Posts