செய்திகள்

கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கையை படமாக இயக்கி நடிக்க‌வுள்ள‌ நடிகர் சிவகார்த்திகேயன்..!(Actor Sivakarthikeyan will direct and act the life of cricketer Natarajan)

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயனாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வந்த ‘கனா’ படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்தும் இருந்தார்.

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. தற்போது இந்த படத்தை சிவகார்த்திகேயனே டைரக்டு செய்ய இருப்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் அளித்துள்ள பேட்டியில், ”எனது வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராக உள்ளது. அந்த படத்தில் எனது கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார். அதுமட்டுமன்றி அந்த படத்தை சிவகார்த்திகேயனே டைரக்டு செய்ய உள்ளார்” என்று தெரிவித்து உள்ளார்.

Actor Sivakarthikeyan

Similar Posts