செய்திகள் | திரைப்பிரபலங்கள்

திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் ‍‍‍‍‍– நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan)

1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் சிங்கம்புணரியில் பிறந்த சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களின் ஆதரவை பெற்ற இவர், தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார். தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்ற திரைப் பிரபலம் ஆனது எப்படி வாங்க பாக்கலாம்.

Actor Sivakarthikeyan

நடிகராவதற்கு முன்பு


நடிகர் சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17, 1985 அன்று தமிழ்நாட்டின் ஜி. டோஸ் மற்றும் ராஜி என்பவருக்கு சிங்காம்புனாரியில் மகனாக பிறந்தார். சிவகார்த்திகேயனின் தந்தை ஜி. டோஸ் ஒரு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தாயார் ராஜி இல்லத்தரசி. இரண்டாவது மகனான சிவகார்த்திகேயனுக்கு திருச்சிராப்பள்ளியில் டாக்டர் கவுரிமனோஹரி என்ற மூத்த சகோதரி உள்ளார். இவரது தாத்தா நாதஸ்வரத்திற்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். அவர் காம்பியன் ஆங்கிலோ இந்தியன் Hr இல் கலந்து கொண்டார்.

Actor Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் திருச்சியில் உள்ள ஜே.ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் இளங்கலைப் பொறியியலை முடித்தார். சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ படித்துள்ளார்.

திருமண வாழ்வு

சிவகார்த்திகேயன் தனது உறவினரான ஆர்த்தியுடன் 16 மே 2010 அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அவர் 27 ஆகஸ்ட் 2010 அன்று ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் ஆராதனா அக்டோபர் 2013 இல் பிறந்தார், மற்றும் ஒரு மகன் குகன் தாஸ் ஜூலை 2021 இல் பிறந்தார். ஆராதனா தனது தந்தையுடன் இணைந்து கனா படத்தில் இருந்து “வாயாடி பெத்த புள்ள” என்ற பாடலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு

கல்லூரியின் போது, சிவகார்த்திகேயன் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்றார் மற்றும் மேடையில் மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடி செய்தார். அவரது படிப்புக்கு இடையில் அவர் மூன்று மாதங்கள் இடைவெளி எடுத்தார், இந்த காலகட்டத்தில் அவரது நண்பர்கள் அவரை ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பப்பட்ட நகைச்சுவைக்கான ரியாலிட்டி ஷோவான கலக்க போவது யாருக்கு ஆடிஷனுக்குச் செல்லுமாறு அவரை கேட்டார்கள். மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடக்கத்தில் பங்கேற்க தயக்கம் இருந்தபோதிலும், அவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்று மீடியா வெளிச்சத்திற்கு வந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜோடி நம்பர் ஒன் சீசன் 3 மற்றும் பாய்ஸ் Vs கேர்ள்ஸ் சீசன் 1 மற்றும் 2 போன்ற பல்வேறு டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து பங்கேற்றார். ஜோடி நம்பர் ஒன் தொகுத்து வழங்கியதற்க்காக சிறந்த தொகுப்பாளருக்கான விகடன் விருதை 2011 இல் வென்றார் மேலும் பல நிகழ்ச்சிகளை ஸ்டாரில் தொகுத்து வழங்கினார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் ஜோடி நம்பர் ஒன் சீசன் 5 போன்ற விஜய். நன்கு அறியப்பட்ட டாப் ஷோவான காஃபி வித் சிவாவின் சிறப்புப் பதிப்பையும் அவர் தொகுத்து வழங்கினார். இருப்பினும், அவர் அது இது எது விளையாட்டு நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். அவர் 2014 இல் தனது நண்பர் அட்லீயின் முகபுத்தகம்,மற்றும் 360 டிகிரி போன்ற குறும்படங்களில் நடித்துள்ளார்.பின்னர் நடிகர் அஜித் நடித்த ‘ஏகன்’ திரைப்படத்தில் ஒரு குறிப்பிடப்படாத நடிகராக நடித்துள்ளார் மற்றும் தமிழ் திரைத்துறையில் சில விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

திரைப் பயணம் (சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு)

வாகை சூட வா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது தொகுத்து வழங்கும் திறமையால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் பாண்டிராஜ், 2012 ஆம் ஆண்டு தனது மெரினா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் நடிகனாக அறிமுகமானவர். மக்களின் ஆதரவை பெற்று பிரபலமானார் சிவகார்த்திகேயன்.

அவர் ஓவியாவுடன் இணைந்து நடித்தார், மேலும் அவரது நடிப்பிற்காக பாராட்டப்பட்டார். மெரினா படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.

மெரினா ரிலீஸுக்கு முன், சிவகார்த்திகேயன் 3 படத்தில் ஒரு துணை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார், படத்தில் தனுஷின் நண்பராக நடிக்கிறார். சிவா அவரது பாத்திரத்திற்காக மிகவும் பாராட்டப்பட்டார். திரைப்படத் துறையில் தனது வழிகாட்டியாகக் கருதப்படும் தனுஷுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால், இந்த படம் தனக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார்.

அவர் அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் நடித்த காதல் காமெடி திரைப்படமான மனம் கொத்தி பறவையில் கதாநாயகனாக நடித்திருந்தார், இவருடன் சூரி, இளவரசு, ஆத்மியா ஆகியோர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார். அது பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப்பெற்றது. இவர் இப்படத்தில் ஒரு நகைச்சுவையாளராகவும், நாயகனாகவும் நடித்து தனது நடிப்பை நிலைநாட்டியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஒரு சிறந்த ஆண்டாக இருந்தது, ஏனெனில் அவர் வணிக ரீதியாக வெற்றிகரமான மூன்று படங்களில் நடித்தார். முதலாவது கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிவகார்த்திகேயன் மீண்டும் பாண்டிராஜுடன் இணைந்து நடித்தார். இதில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, டெல்லி கணேசன் போன்றோர் நடித்துள்ளனர்.

அதே ஆண்டில் அவர் நடித்த அடுத்த திரைப்படம் எதிர் நீச்சல் ஆகும், வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கிய தனுஷின் முதல் தயாரிப்பு முயற்சியான எதிர் நீச்சல், அதுவும் வெற்றி பெற்றது. இப்படத்தில்,தனது அடையாளத்தை உருவாக்க கடுமையாக பாடுபடும் ஒரு சாதாரண இளைஞனாக நடித்துள்ளார். இவருடன் பிரியா ஆனந், நந்திதா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு முதல் முறை கதாநாயகனாக தன்னை நிரூபித்து கொள்ள கிடைத்த முதல் திரைப்படம். இப்படம் மக்களின் பேராதரவில் வெற்றி பெற்றுள்ளது.

அந்த ஆண்டில் அவரது மூன்றாவது வெளியீடாக இயக்குனர் பொன்ராமின் நகைச்சுவை திரைப்படமான வருதபடாத வாலிபர் சங்கம் ஆகும், இதில் அவர் கவலையற்ற கிராமப்புற இளைஞராக நடித்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்தது மட்டுமின்றி, படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்தது. 2013 ஆம் ஆண்டில் எதிர் நீச்சல் & வருடபடாத வாலிபர் சங்கத்திற்காக சிறந்த பொழுதுபோக்கு நடிப்புக்கான பிஹைண்ட்வுட்ஸ் தங்கப் பதக்கம் விருதை வென்றார். அதே ஆண்டில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் மற்றும் வருடபடாத வாலிபர் சங்கம் ஆகியவற்றிற்காக ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கிற்கான விஜய் விருதை வென்றார். இவர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தினை தொடர்ந்து இவர் தமிழ் திரையில் ஒரு முக்கிய நடிகராக பல விருதுகளை பெற்று பிரபலமானார்.

2014 ஆம் ஆண்டில், ஏ ஆர் முருகதாஸ் தயாரித்த மான் கராத்தே என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்திருந்தார், இயக்குனர் திருக்குமரன் இயக்க சிவ கார்த்திகேயன், ஹன்சிகா மோட்வானி, சூரி, வம்சி கிருஷ்ணா மற்றும் சதீஸ் பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்திருந்தார் .இந்த திரைப்படம் கவலையற்ற இளைஞனைக் காட்டுகிறது, அவர் ஒரு பெண்ணைக் கவர குத்துச்சண்டை வீரராக தன்னைப் பொய்யாக சித்தரிக்கிறார். ஸ்போர்ட்ஸ் மற்றும் நகைச்சுவை படமாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம். சினிமா ரசிகர்களால் சுலபமாக கணிக்கப்படும் கதையாக இப்படம் அமைந்திருந்தாலும், நகைச்சுவை திரைக்கதையில் இப்படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.
சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடித்ததற்காக எடிசன் விருதுகள் – தி ரைசிங் ஸ்டார் மற்றும் யூத் ஐகானுக்கான SICA விருதுகளை வென்றார். இந்தப் படத்தில் ராயபுரம் பீட்டர் என்ற பாடலையும் பாடியுள்ளார்.

2015 இல், சிவகார்த்திகேயன் மீண்டும் இயக்குனர் துரை செந்தில்குமாருடன் காக்கி சட்டை என்ற போலீஸ் வேடத்தில் பணிபுரிந்தார்,இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். மேலும் படத்தில் `ஐ’ம் சோ கூல் பாடலையும் பாடினார். அனிருத் ரவி சந்தர் இசையமைக்கின்றார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்தது மற்றும் அவருக்கு அந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கிற்கான விருதைப் பெற்றுத் தந்தது.

சிவகார்த்திகேயன் தனது வருடபடாத வாலிபர் சங்கத்தின் இயக்குனர் பொன்ராமுடன் மீண்டும் ரஜினி முருகன் படத்தில் பணியாற்றினார். ரஜினி முருகன் தமிழ் நகைச்சுவை, காதல் மற்றும் அதிரடி கலந்த மசாலா திரைப்படம். இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சூரி, சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் துணை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க டிஇமான் இசையமைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் அதிரடி திரைப்படம். நகைச்சுவை கதைக்களத்தில் தொடர்ந்து நடித்து மக்களின் ஆதரவை பெற்ற சிவா, இப்படத்தின் மூலம் ஒரு அதிரடி நாயகனாக வெற்றி பெற்றுள்ளார்.

2016 இல் வெளியான ரெமோ சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள காதல் நகைச்சவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்க, அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். திரைத்துறையில் அறிமுகமாகி மிக குறைந்த காலத்தில் ஒரு பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து பிரபலமான திரைப்படம். இப்படத்தின் காதல் இடம் பெற்ற காட்சிகள் மற்றும் நகைச்சுவைகள் மக்களின் வரவேற்பை பெற்று பிரபலமானது.

வேலைக்காரன் திரைப்படம் இயக்குனர் மோகன் ராஜா “தனி ஒருவன்” படத்திற்கு பின்னர் இப்படத்தினை இயக்கியுள்ளார். தனி ஒருவன் படத்தின் வெற்றியும், சுவாரஸ்ய திரைக்கதையும் இப்படத்திற்கு வெற்றியை சுலபமாக அள்ளித்தந்தது. இப்படத்தில் சிவகர்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில், பிரகாஷ்ராஜ், ஸ்நேகா, ரோபோ சங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, சார்லி, தம்பி ராமையா உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

சீம ராஜா (2018) பொன்ராம் இயக்கத்தில் நடித்திருந்தார். சிவகார்த்தியனுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார் இவருடன் சூரியும் இணைந்திருந்தார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சிம்ரன் நடித்திருந்தார் அதுவும் சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவர் சந்தித்த முதல் தோல்வி திரைப்படம் இதுவாகும். இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு இருந்த மிகுந்த எதிர்பார்புகளை பூர்த்தி செய்யாததே இப்படத்தின் தோல்விக்கு காரணம்.

2019-ம் ஆண்டு கனா திரைப்படம் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடித்த விவசாய மற்றும் விளையாட்டு துறை சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் மூலம், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், படகராக பணியாற்றியுள்ளார். கபாலி புகழ் நெருப்புடா ஆசிரியர் மற்றும் பாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்திற்கு திபு நின்னான் தாமஸ் இசையமைத்துள்ளார். விளையாட்டு மற்றும் விவசாய படமாக இப்படம் உருவாகி பல ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது. படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் அந்த படத்தினை தனது “எஸ் கே ப்ரோடுச்டின்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்து தயாரிப்பாளராக தமிழ் திரையில் பணியாற்றி பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mr.லோக்கல் திரைப்படம் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி படும் தோல்வியை சந்தித்துள்ள திரைப்படம். நகைச்சுவை மற்றும் ஒரு குடும்ப படமாக நடித்து மக்களின் நம்பிக்கையை பெற்ற சிவகார்த்திகேயன், இப்படத்தில் மக்களின் எதிர்பார்ப்பில் சற்று தோல்வியடைந்துள்ளார். இந்த திரைப்படமும் கலவையான விமர்சனத்தை பெற்றது.

மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்விக்கு பின்னர் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படம் ஒரு குடும்ப கதையை தேர்ந்தேடுத்து நடித்து மக்களின் நம்பிக்கை மீண்டும் தன்வச படுத்தியுள்ளார் சிவா. 2019 இயக்குனர் பாண்டியராஜ் உடன் மீண்டும் இணைந்தார் சிவகார்த்திகேயன். 2013-ஆம் ஆண்டு வெளியான “கேடி பில்லா கில்லாடி ரங்கா” திரைப்படத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக நடிகர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் பாண்டியராஜ்-யும் கூட்டணி அமைத்தனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவல் நடித்திருக்க, சிவாகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இப்படம் சிவகார்த்திகேயனின் திரைவாழ்வில் ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாகும்.

ஹீரோ இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன் சர்ஜா, கல்யாணி பிரியதர்சன் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டர் ரூபன் எடிட்டிங் செய்கிறார். மேலும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ படமாக உருவாக்கப்பட்டு இப்படம் பிரபலமானது. குழந்தைகளை கவரும் நோக்கத்திலும், சமுதாயத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்துகளை கொண்டு உருவாக்கப்பட்டது ஆனால் இப்படம் தமிழில் பிளாப் ஆகியுள்ளது.

டாக்டர் 2021 இல்  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் அதிரடி – திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே ப்ரோடுக்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஃபர்ஸ்ட் காபி முறையில் தயாரித்து, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.கொரோன ஊரடங்கிற்கு பின் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு பிளாக்பஸ்டர் படமாக பிரபலமாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் கேரியரில் 100 கோடி வசூல் செய்த திரைப்படம் இதுவாகும். இவர் 100 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து 2022 இல் டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை – திரில்லர் திரைப்படம்.

டான் படத்தினை நாயகன் சிவகார்த்திகேயன் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து பின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது லைக்கா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

அறிமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் என இரு தரப்பினரையும் மகிழ்வித்து 100 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்து, தமிழ் சினிமாவில் சிவகார்த்தியை முன்னணி முக்கிய நட்சத்திரமாக இப்படம் உயர்த்தியுள்ளது.

2022 இல் ப்ரின்ஸ் இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & காதல் திரைப்படம். இப்படத்தில் கதாநாயகியாக உக்ரைனை சேர்ந்த மரியா என்பவர் நடித்திருந்தார். இப்படத்தினை தயாரிப்பாளர் சோனாலி நரங், சுரேஷ் பாபு மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார்.

நகைச்சுவை – காதல் என தமிழ் ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு குடும்பப்படமாக உருவாகியுள்ள ப்ரின்ஸ் 2022 தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ் & தெலுங்கு சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மக்கள் பெரிய அளவில் பிரபலமானது. ஆனால் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக இப்படம் பேசப்படவில்லை. தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இந்த ப்ரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களில் சராசரி படமாக இடம்பிடித்துள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்களை பொறுத்த வரையில் சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் முதல் முறை பண்டிகைக்கு வெளியான முதல் திரைப்படம் என்பதால் இந்த படத்தை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் சிவகார்த்திகேயனின் படங்கள்

மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருடன் அதிதி சங்கர்,யோகி பாபு,மிஸ்கின்,சுனில், சரிதா நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் திரையரங்குகளில் காணலாம் என படக்குழு அறிவித்துள்ளது.

அடுத்த திரைப்படமாக அயலான் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங்க், கருணாகரன் மற்றும் பானு பிரியா நடிக்கவிருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் டி ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தின் கதைக்களம் அறிவியல் தொழில்நுட்பத்தை சார்ந்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள்

2018 -கனா
2019 -நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
2021 -வாழ்
2021 -டாக்டர்
2022 -டான்

பாடலாசிரியராக சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள்

2018 கோலமாவு கோகிலா “கல்யாண வயசு” (Kalyana Vayasu-Kolamaavu Kokila)
2019 குர்கா “ஹே போயா” (Hey Poya-Gurkha)
நம்மா வீட்டு பிள்ளை “காந்தாக் கண்ணாழகி” (Gaandha Kannazhagi- Namma Veettu Pillai)
அதித்ய வர்மா “இது என்னா மயாமோ” (Idhu Enna Maayamo -Adithya Varma)
2021 டாக்டர் “செல்லாமா” | “சோ பேபி ” (Chellamma, So Baby -Doctor)
2021 நாயாய் சேகர் “எடக்கு மோடக்கு” (Edakku Modakku -Naai Sekar)
2022 எதற்கும் துனிந்தவன் “சும்மா சுருனு” (Summa Surrunu -Etharkkum Thunindhavan)
பீஸ்ட் “அரபு குத்து” (Arabic Kuthu – Beast)
டான் “பிரைவேட் பார்ட்டி “(Private Party – Don)

பாடிய பாடல்கள்

சிக்ஸர் – எங்கவென கோவிச்சிகினு போ | Sixer – Engavena Kochikinu Po
கானா- வாயாடி பெத்த புள்ள | Kanaa-Vaayadi Petha Pulla
காக்கி சட்டை-ஐயம் சோ கூல் | Kaaki Sattai-Im So Cool
வருடபடாத வாலிபர் சங்கம் – வருடபடாத வாலிபர் சங்கம் | Varuthapadatha Vaalibar Sangam- Varuthapadatha Valibar Sangam
கலக்கலு Mr லோக்கல் -Mr.லோக்கல் | Mr.Local -Kalakkalu Mr Localu
ரஜினிமுருகன் – ரஜினி முருகன் | Rajinimurugan – Rajini Murugan
மான் கராத்தே – ராயபுரம் பீட்டர் | Maan Karate – Royapuram Peter மாப்ள சிங்கம் – எதுக்கு மச்சான் | Mapla Singam – Edhukku Machan – லிஃப்ட் – இன்னா மயிலு | LIFT – Inna Mylu தும்பா- ஹம்ப்டி டம்ப்டி | Thumbaa–Humpty Dumpty

விருதுகள்

2011 விகடன் விருது – ஜோடி எண் 1 க்கு சிறந்த தொகுப்பாளர் | Vikatan Award – Best Anchor for Jodi No.1

2012 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் சிறப்பு பரிசு ‘மெரினா’ | Tamil Nadu State Film Awards Special Prize Award ‘Marina’

எடிசன் விருதுகள் | Edison Awards
2013 சிறந்த உயரும் ஆண் நட்ச்சத்திற்க்கான | Best Male Rising Star,

2014 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் – தமிழ் எதிர் நீச்சல் | South Indian International Movie Awards Best Actor – Tamil ‘Ethir Neechal’

2014 விஜய் விருதுகள் இந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு நடிகர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்,மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் | Vijay Awards Entertainer of the Year Kedi Billa Killadi Ranga, Ethir Neechal, Varuthapadatha Valibar Sangam

2014 மிர்ச்சி மியூசிக் விருதுகள் சவுத் – யூத் ஐகான் விருது | Mirchi Music Awards South – Youth Icon Award

எடிசன் விருதுகள் 2015 ஆம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கிற்கான நடிகர் ‘ரெமோ’| Edison AwardsBest Entertainer of the Year

2017 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் – தமிழ் ரெமோ | South Indian International Movie Awards Best Actor – Tamil Remo

2018 எடிசன் விருதுகள்பிடித்த நடிகர் வேலைக்காரன்| Edison Awards Favorite Actor

2021 கலைமாமணி விருது – சிறந்த நடிகர் | Kalaimamani Award – Best Actor

2022 சைமா சிறந்த நடிகருக்கான விருது டாக்டர் | Siva Karthikeyan Best Actor Award for Doctor | SIIMA 2022

2022 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் – தமிழ் டாக்டர் | South Indian International Movie Awards Best Actor – Tamil Doctor

தமிழ்த் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எனப் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் சிவகார்த்திகேயன் மென் மேலும் பல சாதனைகள் மற்றும் வெற்றிகளைப் பெற திரை உலா சார்பாக வாழ்த்துகின்றோம்.

Similar Posts