செய்திகள்

கோடியிலே புரண்டாலும் ரயில்நிலையத்தில் தரையில் படுக்கும் நடிகர் சோனு சூட்..!(Actor Sonu Sood sleeps on the floor of the railway station even though he is rich)

நெஞ்சினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகர் சோனு சூட். 

தற்போது வரை பல ஏழை மக்களுக்கு கேட்டு கேள்வி இல்லாமல் உதவி செய்து கொடுத்தவர் தான் நடிகர் சோனு சூட்.

தற்போது மக்கள் பலரும் சேர்ந்து நடிகர் சோனு சூட்டுக்கு ஒரு பிரம்மாண்டமான சிலையை வைத்துள்ளார்கள். அதற்காக அவருக்கு மிகப்பெரிய பாராட்டும் கிடைத்தது.

தற்போதும் அவரது வீடு தேடி உதவி கேட்க பலரும் செல்கிறார்கள். அவரும் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது அவர் கூலாக ரயில் நிலையத்தில் படுத்திருந்து அதன் பின் லோக்கல் ரயில் ஏறி வீட்டுக்கு சென்று இருக்கிறார். ரயில் நிலைய குழாயில் தண்ணீர் குடித்த அவர் ரயிலில் ஏறி சென்ற போது அவருடன் போட்டோ எடுக்க பலரும் வந்திருக்கிறார்கள்.

அவர்களுடன் பொறுமையாக அவர் செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Actor Sonu Sood

Similar Posts