செய்திகள்

நடிகர் சூரிக்கு ஹோட்டல் சார்பாக ஆஜர் நோட்டிஸ்..!(Actor Soori served notice on behalf of the hotel)

காமெடி நடிகரான சூரிக்கு சொந்தமான அம்மன் ஹோட்டல் மதுரையில் உள்ளது. இந்த ஹோட்டலில் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணம் வசூலித்து வருவதாக கூறி மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்படி, வணிக வரி துறையினர் சூரியின் அம்மன் ஹோட்டலில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவு பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.

இதனால் 15 நாட்களுக்குள் நடிகர் சூரி நேரில் ஆஜராகி இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, நோட்டீஸ் அனுப்பியுள்ளது வணிக வரி துறை.

Actor Soori

Similar Posts