செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகர் ஸ்ரீகாந்த் குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார் | Actor Srikanth went on a trip to Thailand with his family.

ரோஜாகூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படமே வெற்றி பெற்று பாராட்டுகளையும் பெற்றது. இவரது அடுத்த வெற்றிப்படமாக சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் அமைந்தது. தொடர்ந்து கரு.பழனியப்பன் இயக்கத்தில் உருவான பார்த்திபன் கனவு இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.

Actor Srikanth

பின்தொடர்ந்த படங்கள் தோல்வியைத் தழுவ சிலகாலம் வாய்ப்புகள் இன்றி இருந்தார். 2007ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து பல புதிய படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார், அது தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

Similar Posts