செய்திகள்

மகளுக்காக இஸ்லாமியராக மாறும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி..!(Actor Superstar Rajini becomes a Muslim for his daughter)

மலையாளத் திரை உலகின் முன்னணி நடிகர் மோகன்லாலுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெய்லர். இந்தத் திரைப்படம் கோடை விடுமுறையின் போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட திரைப்படமான இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் சிறப்பு தகவல் சூப்பர் ஸ்டார் இந்த திரைப்படத்தில் ஒரு இஸ்லாமியராக நடிக்க இருக்கிறார் என்பதுதான்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக இருந்தாலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

Actor Superstar Rajini

Similar Posts