செய்திகள்

நடிகர் சூரி சற்று முன்பு இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். | Actor Suri recently met Ilayaraja in person and thanked him.

விடுதலை படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

Actor Suri recently met Ilayaraja

வெற்றிமாறன் விடுதலையில் முதல்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். படத்தின் பல இடங்களில் இளையராஜாவின் இசை மெய் சிலிர்க்க வைப்பதாக ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். அதேபோல் படத்தின் பாடல்களும் தாலாட்டும் உணர்வை கொடுப்பதாக தெரிவித்துவருகின்றனர்.

Actor Suri recently met Ilayaraja

இந்நிலையில் விடுதலை படத்தின் மேக்கிங்கிற்கும், இளையராஜாவின் இசைக்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோ இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில்

படத்தின் நாயகன் சூரி சற்று முன்பு இளையராஜா சந்தித்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவரது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு நன்றி தெரிவித்து குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதாவது
சற்று நேரமுன்பு “இசை”யை‌ச் சந்தித்து நன்றி கூறினேன்..ஆசி வாங்கினேன். இறைவனுக்கு நன்றி !! “
விடுதலை வெற்றிக்களிப்பினிடையே சூரியின் நெகிழ்ச்சிப் பதிவு !!

Similar Posts