இயக்குனர் ஹரியின் ஸ்டுடியோ திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா | Actor Suriya attended the opening ceremony of director Hari’s studio
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து திரையில் மாயாஜாலங்கள் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் சிறப்பாக அமைந்தது. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்று சூர்யாவை கர்ஜிக்க வைத்த பெருமை ஹரியையே சேரும்.

இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீத்தா ஹரியின் குட்லக் ஸ்டூடியோசை தற்போது சூர்யா துவக்கி வைத்துள்ளார். 40 வருட பாரம்பரியமிக்க குட்லக் ப்ரிவியூ திரையரங்கத்தை தற்போது குட்லக் ஸ்டூடியோவாக துவக்கியுள்ளனர்.

திரைத்துறை பணிகளான ரெக்கார்ட்டிங், டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகளை நவீன வசதிகளுடன் செய்யும் வகையில் இந்த ஸ்டூடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வேட்டி சட்டையுடன் நடிகர் சூர்யா கலக்கலாக கலந்துக் கொண்டார். அவருடன் நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் ராஜசேகர், எஸ்பி முத்துராமன், ஆர்வி உதயகுமார் ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

சென்னையில் முக்கிய அடையாளமாக இருந்த விஜயகுமாருக்கு சொந்தமான குட்லக் திரையரங்கம் தற்போது ஸ்டூடியோவாக மாற்றப்பட்டுள்ளது.