நடிகர் சூர்யாவின் வணங்கானை தொடர்ந்து வாடிவாசல் படமும் நிறுத்தப்பட்டது..!(Actor Surya’s After Vanangaan, Vadivasal’s film was also shelved)
நடிகர் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணைய இருக்கும் வாடிவாசல் படமும் ட்ராப் ஆகிவிட்டது என செய்தி பரவி வருகிறது.
வாடிவாசல் படம் அறிவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இப்படி ஒரு தகவல் வந்தது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் தாணு இந்த செய்தி உண்மை இல்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறார். வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தில் பிசியாக இருக்கிறார், அது முடிந்ததும் வாடிவாசல் நிச்சயம் தொடங்கும் என தெரிவித்து இருக்கிறார்.
