செய்திகள்

சொத்திற்காக அடிபடும் நடிகர் திலகம் சிவாஜிகணேஷனின் குடும்பம்..!(Actor Thilakam Sivajiganesan’s family is beaten for property)

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாக மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தந்தை கணேசன் எழுதி வைத்ததாகக் கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், பொது அதிகாரப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்று தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமானம் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக தனியார் கட்டுமான நிறுவனமான அக்‌ஷயா ஹோம்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

தொர்ந்து மனுதாரர்களான சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில், வழக்கில் கூடுத்ல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைத்த நிலையில் இன்று விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரபு தரப்பு கூறியது படி சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், சிவாஜியின் மகள்கள் கொடுத்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

Actor Thilakam Sivajiganesan

Similar Posts