செய்திகள்

ரசிகர்கள் 100 பேருக்கு இலவச சுற்றுலாவை வழங்கும் நடிகர் விஜயதேவரகொண்டா..!(Actor Vijay Deverakonda will give a free tour to 100 fans)

பான் இந்தியா கதாநாயகனாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவர் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வழக்கம் வைத்திருக்கிறார்.

இந்த முறை டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், #தேவரசாண்டா, 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடைப்பிடித்து வரும் ஒரு நடைமுறை. இந்த ஆண்டு சிறப்பான ஐடியா ஒன்றை வைத்திருக்கிறேன்.

உங்களில் (ரசிகர்கள்) 100 பேரை விடுமுறை கொண்டாட்டத்திற்கு சுற்றுலா தலத்துக்கு அனுப்ப போகிறேன். அதற்கான அனைத்து செலவுகளும் செலுத்தப்பட்டு விடும்.

எந்த இடம் என தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள் என குறிப்பிட்டு உள்ளார். அதன் கீழே இந்திய மலை பகுதிகள், இந்திய கடற்கரை பகுதிகள், இந்திய கலாசார சுற்றுலா, இந்தியாவின் பாலைவனம் ஆகிய சுற்றுலாவுக்கான 4 பொதுவான இடங்களை குறிப்பிட்டு உள்ளார்.

இந்த இடங்களில் ஒன்றை தேர்வு செய்யும்படி, அதற்கான வாய்ப்பையும் ரசிகர்களிடமே விட்டு உள்ளார். இதனால் பரவசமடைந்த அவரது ரசிகர்கள் டுவிட்டரில் லைக்குகளையும், விமர்சனங்களையும் குவித்து வருகின்றனர்.

Actor Vijay Deverakonda

Similar Posts