செய்திகள்

மீண்டும் கார் பிரச்சனையில் நடிகர் விஜய்..!(Actor Vijay is in car trouble again)

வாரிசு படத்தினை தெலுங்கு திரையுலகில் வெளியிட சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் விஜய். இதற்கு பல காரணங்களும் விளக்கங்களும் பலர் தெரிவித்து வந்த நிலையில் விஜய்

கடந்த ஞாயிறு அன்று அவரது பனையூர் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்தார். கட்சி சார்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாட அவர்களுக்காக பிரியாணியும் பகிரப்பட்டது.

இந்நிலையில் விஜய் அந்த நிகழ்வை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது விஜய்யின் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறி போக்குவரத்து போலிசார் விஜய்க்கு ரூ. 1000 அபராதம் விதித்துள்ளார்கள்.

மோட்டார் வாகனச்சட்டத்தை மீறி இந்த செயலில் ஈடுபட்டதால் இந்த அபராதம் வழங்கப்பட்டுள்ளது. தன் ரசிகர்கள் பாசத்தால் எடுத்த வீடியோ விஜய்க்கே பிரச்சனையாக அமைந்துள்ளது.

Actor Vijay

Similar Posts