செய்திகள்

5 வயதில் நடப்பதை 35 வயதில் எதிர்பார்த்ததால் அப்பாவை பிரிந்த விஜய்..!(Actor Vijay separated from his father because he expected what happened at the age of 5 at the age of 35)

கடந்த சில வருடங்களாக விஜய் தனது பெற்றோர்களிடம் இருந்து விலகி இப்போது தனியாக நீலாங்கரை வீட்டில் வசித்து வருகிறார்.

தனது பெற்றோர்களை பார்ப்பதும், பேசுவதும் இல்லையாம். இது குறித்து எஸ்ஏசி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது விஜய்யை நான் 5 வயதில் பார்த்தது போல 35 வயதிலும் பார்த்துவிட்டேன்.

அதுதான் நான் செய்த மிக பெரிய தவறு. அதாவது ஐந்து வயதில் நாம் சொல்வதை குழந்தைகள் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் 35 வயதில் சொல்லி கொடுத்தது அவருக்கு பிடிக்கவில்லை என்பதை எஸ்ஏசி ஒத்துக் கொண்டார். இதுதான் இவர்களது பிளவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷனில் அவரது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அங்கு விஜய் அவர்களை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.

Actor Vijay

Similar Posts