விஜய் சேதுபதி நடித்துள்ள வெப்சீரிஸ் பார்சி..!(Actor Vijay Sethupathi’s web series Farzi)
‛தி பேமிலி மேன்’ தொடரை இயக்கிய ராஜுடன் டீகே இயக்கியுள்ள உள்ள வெப் தொடர் பார்சி. இதில் விஜய்சேதுபதி, ஷாஹித் கபூர், கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடர் வருகிற பிப்ரவரி 10ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர். கார்பரேட் நிறுவனங்களை எதிர்த்து நிற்கும் ஒரு தெருக்கூத்து கலைஞனின் கதை. இதில் தெருக்கூத்து கலைஞனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
இது குறித்து பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10ம் தேதி வெளியாகவிருக்கும் தொடருக்கு மக்கள் மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம் என்று இரட்டை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே கூறியுள்ளனர்.
